என் மலர்
செய்திகள்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #RIPThoppilMohamedMeeran #SahityaAkademi
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.
இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#RIPThoppilMohamedMeeran #SahityaAkademi
Next Story






