என் மலர்
செய்திகள்

கோவில்பாளையம் அருகே டாக்டர் வீட்டில் ரூ.1½ லட்சம் திருட்டு
கோவில்பாளையம் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கோவை:
கோவை விளாங்குறிச்சி ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 36). டாக்டர். நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் இரவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த சந்தானம் வீட்டை சுற்றி பார்த்தார்.
அப்போது வீட்டின் பால்கனி வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சந்தானம் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story