என் மலர்
செய்திகள்

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK #MKStalin
சென்னை:
திமுக முன்னாள் எம்.பியான வசந்தி ஸ்டான்லி (56), 2008 முதல் 2014 வரை திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். பத்திரிகையாளரான இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் வைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், கவிஞர், எழுத்தாளர், திமுக பேச்சாளராக விளங்கியவர் வசந்தி ஸ்டான்லி. வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பத்துக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் இழப்பு.
திமுகவின் செயல் வீராங்கனையாக இருந்த வசந்தி ஸ்டான்லி மறைவால் துயரமடைந்தேன். நாடு முழுவதும் திமுக கொள்கை கருத்துக்களை எடுத்துச் சொல்லக் கூடிய சிறந்த பெண்மணி என தெரிவித்தார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK #MKStalin
Next Story






