என் மலர்
செய்திகள்

X
புதுக்கோட்டையில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்
By
மாலை மலர்25 April 2019 8:28 PM IST (Updated: 25 April 2019 8:28 PM IST)

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ஹாகீர் உசேன் (வயது 38).இவர் நேற்று காலை பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். பின்னர் மீண்டும் அவர் கரை திரும்பவில்லை. நேற்று மாலை அவர் வீடு திரும்பி இருக்க வேண்டும்.
இது குறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடலுக்கு சென்ற மீனவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் படகில் சென்ற போது டீசல் இல்லாமல் படகு நின்று விட்டதா? அல்லது ஏதாவது தொழில் நுட்ப காரணமா என விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
X