என் மலர்

  செய்திகள்

  அரும்பாக்கம் ரவுடி கொலையில் 5 பேர் கைது
  X

  அரும்பாக்கம் ரவுடி கொலையில் 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரும்பாக்கத்தில் ரவுடியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பா.ம.க. பிரமுகர் கொலைக்கு பழிவாங்க 8 வருடம் காத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
  போரூர்:

  திருவொற்றியூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி (வயது 39). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

  நேற்று மதியம் கிருஷ்ணமூர்த்தி லோடு ஆட்டோவை ஓட்டிக் கொண்டு அரும்பாக்கம் பெருமாள் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர்.

  பட்டப்பகலில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  கொலையாளிகளை பிடிக்க அண்ணா நகர் உதவி கமி‌ஷனர் குணசேகர் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பெருந்துறை முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

  கொலை நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

  இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய கோயம்பேட்டைச் சேர்ந்த சங்கர், அஜித் குமார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த கவிராஜ், பாபு, கார்த்திக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 பைக் 2 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

  கைதான சங்கர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

  அரும்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு எனது சித்தப்பாவும் பாமக பிரமுகருமான நாகராஜ் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இதேபோல் 2009-ம் ஆண்டு சித்தப்பாவின் சகோதரர் சரவணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

  இந்த இரண்டு கொலைக்கும் மூல காரணமாக ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுத்து செயல்பட்டவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிந்தது.

  எனவே தந்தை இல்லாத எங்களை வளர்த்து ஆளாக்கிய 2 சித்தப்பாக்களின் கொலைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தியை பழி தீர்க்க முடிவு செய்தேன். 8ஆண்டுகளுக்கு பிறகு எனது நண்பர்கள் உடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை வெட்டி கொலை செய்தோம்.

  இதில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் மீது ஏற்கனவே அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×