என் மலர்

  நீங்கள் தேடியது "Chennai murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை கே.கே. நகர் அடுத்த நெசப்பாக்கத்தில் திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
  போரூர்:

  கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24) எலக்ட்ரிசியன்.

  இவரது மனைவி சந்தியா (20). இவர்கள் கடந்த ஜனவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தியாவுடன் அவரது தாய் சரிதா தந்தை சங்கர் ஆகியோர் வசித்து வந்தனர்.

  இந்தநிலையில் இன்று காலை 11 மணி அளவில் அருண்குமார்-சந்தியா இடையே தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் கத்தியால் சந்தியா தொண்டையில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சந்தியா சுருண்டு விழுந்து இறந்தார். இதை தடுக்க முயன்ற சந்தியாவின் தாய் சரிதாவுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் பிராங்க் ரூபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருள்குமாரை கைது செய்தனர்.

  சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனை காரணமா? என அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாடியில் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த உறவினரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
  பூந்தமல்லி:

  பாடி, சக்திநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது45) தே.மு.தி.க.வில் பொறியியல் பிரிவில் மாநில இணைச் செயலாளராக இருந்தார். கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

  நேற்று காலை அவர், 9-ம் வகுப்பு படிக்கும் மகனை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் இறக்கிவிட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். பாடி, சீனிவாசன் நகர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மகும்பல் பாண்டியனை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.

  இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

  இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய அமைந்தகரையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

  அவர் கொலையுண்ட பாண்டியனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

  வினோத்குமாருக்கும், பாண்டியனுக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே குமரன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பை பெற்றதில் பாண்டியனிடம் பணம் இருந்துள்ளது.

  இதனை அறிந்த வினோத் குமார் பணம் கேட்டு பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

  இந்த மோதலில் கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வினோத்குமாரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரும்பாக்கத்தில் ரவுடியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பா.ம.க. பிரமுகர் கொலைக்கு பழிவாங்க 8 வருடம் காத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
  போரூர்:

  திருவொற்றியூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி (வயது 39). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

  நேற்று மதியம் கிருஷ்ணமூர்த்தி லோடு ஆட்டோவை ஓட்டிக் கொண்டு அரும்பாக்கம் பெருமாள் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர்.

  பட்டப்பகலில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  கொலையாளிகளை பிடிக்க அண்ணா நகர் உதவி கமி‌ஷனர் குணசேகர் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பெருந்துறை முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

  கொலை நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

  இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய கோயம்பேட்டைச் சேர்ந்த சங்கர், அஜித் குமார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த கவிராஜ், பாபு, கார்த்திக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 பைக் 2 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

  கைதான சங்கர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

  அரும்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு எனது சித்தப்பாவும் பாமக பிரமுகருமான நாகராஜ் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இதேபோல் 2009-ம் ஆண்டு சித்தப்பாவின் சகோதரர் சரவணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

  இந்த இரண்டு கொலைக்கும் மூல காரணமாக ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுத்து செயல்பட்டவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிந்தது.

  எனவே தந்தை இல்லாத எங்களை வளர்த்து ஆளாக்கிய 2 சித்தப்பாக்களின் கொலைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தியை பழி தீர்க்க முடிவு செய்தேன். 8ஆண்டுகளுக்கு பிறகு எனது நண்பர்கள் உடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை வெட்டி கொலை செய்தோம்.

  இதில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் மீது ஏற்கனவே அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாடியில் இன்று காலை தே.மு.தி.க. பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #chennaimurder
  அம்பத்தூர்:

  பாடி குமரன்நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45).

  தே.மு.தி.க. பிரமுகரான இவர் அக்கட்சியில் மாநில பொறியாளர் அணி துணை தலைவராக இருந்து வந்தார். இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வில்லிவாக்கம், தி.நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார்.

  நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார்.

  கட்டிட காண்டிராக்டரான பாண்டியன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

  இவர் இன்று காலை 9 மணியளவில் அண்ணா நகரில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனை கொண்டு விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். பாடி குமரன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் தனது புல்லட்டில் பாண்டியன் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்தது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியன் தப்ப முயன்றார். ஆனால் 6 பேரும் சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். கிரிக்கெட் மட்டையாலும் தாக்கினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  வெட்டும்போது தடுக்க முயன்ற பாண்டியனின் வலது கையில் 3 விரல்கள் துண்டானது.

  பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்தது தொடர்பாக தகராறு இருந்து வந்ததுள்ளது.

  வீடு விற்றது தொடர்பாக பாண்டியன் சிலருக்கு புரோக்கர் கமி‌ஷனாக பணம் கொடுக்க வேண்டியது இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

  இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு பாண்டியனை தொடர்பு கொண்டு போனில் மர்மநபர்கள் பேசியுள்ளனர். அப்போது பாண்டியனுக்கும், போனில் பேசியவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தான் பாண்டியனை கொலை செய்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

  அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பொற்கொடி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

  பாண்டியனின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலை நடந்த இடத்தில் உள்ள கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #chennaimurder
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அரும்பாக்கத்தில் இன்று பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். #ChennaiMurder
  போரூர்:

  சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. பிரபல ரவுடியான இவர் எண்ணூரில் வசித்து வந்தார்.

  இன்று காலையில் கிருஷ்ணமூர்த்தி, அரும்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் பின்புறம் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணமூர்த்தியை சுற்றி வளைத்தது. அவர்களின் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

  ஆனால் மர்ம கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

  இந்த கொலை சம்பவம் காலை 11 மணி அளவில் நடந்தது. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில் மிகவும் துணிச்சலுடன் கொலையாளிகள் கிருஷ்ணமூர்த்தியை தீர்த்துக் கட்டியுள்ளனர்.

  கிருஷ்ணமூர்த்தி கொலையுண்டதை பார்த்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் மிரண்டு போனார்கள். பலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.  இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் குணசேகரன், அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

  கொலை நடந்த இடத்தில் பதிவான கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எண்ணூரில் இருந்து கிருஷ்ணமூர்த்தி மினி வேனை ஓட்டி வந்துள்ளார். அங்கிருந்தே 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து அவரை தீர்த்துக் கட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

  கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

  கிருஷ்ணமூர்த்தி மீது மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து அவர் திருந்தி வாழ்ந்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் பழைய தகராறுகளால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகவே கிருஷ்ணமூர்த்தியை அவரது எதிரிகள் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. #ChennaiMurder
  ×