குத்துச்சண்டை வீரர் படுகொலை- போலீசார் விசாரணை

தனுஷை வெட்டும்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணும் காயம் அடைந்தார்.சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்துச்சண்டை வீரர் படுகொலை- போலீசார் விசாரணை
Published on

சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த குத்துச்சண்டை வீரர் தனுஷை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. அப்போது தனுஷை வெட்டும்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணும் காயம் அடைந்தார்.

அரிவாள் வெட்டில் தலை, உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் தனுஷ் உயிரிந்தார். இச்சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததால் கொலை நடந்துள்ளதாக தனுஷின் உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com