search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை
    X

    அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

    சென்னை அரும்பாக்கத்தில் இன்று பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். #ChennaiMurder
    போரூர்:

    சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. பிரபல ரவுடியான இவர் எண்ணூரில் வசித்து வந்தார்.

    இன்று காலையில் கிருஷ்ணமூர்த்தி, அரும்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் பின்புறம் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணமூர்த்தியை சுற்றி வளைத்தது. அவர்களின் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    ஆனால் மர்ம கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

    இந்த கொலை சம்பவம் காலை 11 மணி அளவில் நடந்தது. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில் மிகவும் துணிச்சலுடன் கொலையாளிகள் கிருஷ்ணமூர்த்தியை தீர்த்துக் கட்டியுள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி கொலையுண்டதை பார்த்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் மிரண்டு போனார்கள். பலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.



    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் குணசேகரன், அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலை நடந்த இடத்தில் பதிவான கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எண்ணூரில் இருந்து கிருஷ்ணமூர்த்தி மினி வேனை ஓட்டி வந்துள்ளார். அங்கிருந்தே 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து அவரை தீர்த்துக் கட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி மீது மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து அவர் திருந்தி வாழ்ந்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் பழைய தகராறுகளால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகவே கிருஷ்ணமூர்த்தியை அவரது எதிரிகள் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. #ChennaiMurder
    Next Story
    ×