என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே 3 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே முண்டகண்ணன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அருள் (25). டிராக்டர் டிரைவரான இவருடைய தந்தையும், தாயும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர் தனது பாட்டி சகுந்தலா வீட்டில் வளர்ந்து வந்தார்.
அருள் தனது உறவினர் மகளான சத்யா என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சத்யா 3 மாத கர்ப்பிணியான நேற்று வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது சகுந்தலா வீட்டில் உள்ள வேலைகளை செய்ய சொல்லி திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட சத்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை கேனை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். சத்யாவின் அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு உடனே கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச் சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். இரவு 11 மணியளவில் சத்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மாகி 7 மாதங்கள் ஆன நிலையில் சத்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றார்.
திருமணமாகி 7 மாதங்களில் கர்ப்பிணியான சத்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.