என் மலர்

  செய்திகள்

  வேகமாக சரியும் நீர் மட்டம் - பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
  X

  வேகமாக சரியும் நீர் மட்டம் - பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
  கூடலூர்:

  வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் முல்லைப் பெரியாறு உள்பட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி 170 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.95 அடியாக குறைந்துள்ளது.

  மேலும் நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்து விட்டதால் அணைக்கு 32 கன அடி நீரே வருகிறது. இதனால் தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

  இந்த நீர் தேனி மாவட்ட குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டதால் உத்தமபாளையம் பகுதியில் முல்லைப் பெரியாறு வறண்டு காணப்படுகிறது.

  வைகை அணை நீர் மட்டம் 45.12 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 96.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

  Next Story
  ×