என் மலர்
செய்திகள்

நாசரேத் அருகே முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் கைது
நாசரேத் அருகே 32 பவுன் நகையை கொள்ளையடித்த மூகமூடி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள கடையனோடை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 78). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி பிரேமா (70). கடந்த பிப்ரவரி 1-ந் தேதி கணவன்-மனைவி இரண்டு பேரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அணிந்திருந்த நகை- பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து நாசரேத் போலீசில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணி தலைமையில் போலீசார் நாசரேத் மற்றும் சுற்று பகுதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்த போது வனதிருப்பதி பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் குரும்பூர் செட்டியார் தெருவைச் சேர்ந்த நாராயணன் (40). வளவன் நகரைச் சேர்ந்த காளிமுத்து (28), தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த பீர்கனி என்ற பீர்முகமது (19) என்பதும், இவர்கள் நாசரேத் தம்பதியினரிடம் முகமூடி அணிந்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடமிருந்து 32 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். #tamilnews

Next Story