என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் டிடிவி கட்சியில் இணைந்தார்
    X

    பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் டிடிவி கட்சியில் இணைந்தார்

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகர் ரஞ்சித் டிடிவி தினகரன் கட்சியில் இணைந்தார். #ActorRanjith #TTVDinakaran
    புதுச்சேரி:

    அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததால் கடும் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகினார்.

    கொள்கைக்கு எதிராக அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததாக புகார் கூறிய நடிகர் ரஞ்சித், கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகர் ரஞ்சித் புதுச்சேரியில் டிடிவி தினகரனை இன்று சந்தித்து அமமுகவில் இணைந்தார்.



    இது குறித்து நடிகர் ரஞ்சித் கூறுகையில், இளைஞர்கள் எதிர்ப்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்ததாக தெரிவித்தார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை தேர்வு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #ActorRanjith #TTVDinakaran
    Next Story
    ×