search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி
    X

    திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினும் ஈஸ்வரனும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். #DMK #KonguNaduMakkalDesiyaKatchi
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக தொகுகள் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கொங்கு நாடு மக்கள்தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயம் வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    துரைமுருகன் தலைமையிலான தொகுதி உடன்பாடு குழுவினருடன் ஈஸ்வரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

    தி.மு.க. கூட்டணியில் ஈஸ்வரனுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் ஈஸ்வரனும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.



    உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் அல்லது திருப்பூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. #DMK #KonguNaduMakkalDesiyaKatchi
    Next Story
    ×