search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது நாளாக நீடித்த வேலைநிறுத்தம் - கடலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    3-வது நாளாக நீடித்த வேலைநிறுத்தம் - கடலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    3-வது நாளாக நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதில் கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும், அரசு விதிகளின்படி மட்டுமே நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடந்த 18-ந் தேதி மு தல் தொடர் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி கடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊழியர் அன்பழகன் தொடக்க உரையாற்றினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சேகர், ஒப்பந்த ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ஆனந்தன், தனியார் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி குருராமலிங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.

    போராட்டம் நடத்திவரும் எங்களை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் எங்களது போராட்டம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளது. அப்படி போராட்டம் நடந்தால் பி.எஸ்.என்.எல். சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் என பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவர் தெரிவித்தார். 
    Next Story
    ×