search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் அருகே வாலிபர் எரித்துக்கொலை
    X

    ஓசூர் அருகே வாலிபர் எரித்துக்கொலை

    ஓசூர் அருகே தைல தோப்பில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே சர்ஜாபுரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான லே-அவுட் உள்ளது. இந்த லே-அவுட்டில் தைல தோப்பும் உள்ளது. நேற்று மாலை அந்த தைல தோப்பில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரித்துகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். 

    அவரது உடல் அழுகியும் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கர்நாடக மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த வழியே சென்றவர்கள் பார்த்து பாகலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது வாலிபர் காணாமல் போனாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக பகுதியில் கொலை செய்யப்பட்டு வாலிபர்கள் பிணம் ஓசூர் பகுதியில் வீசப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த தொல்லை இல்லாமல் இருந்து வந்தது. தற்போது மீண்டும் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தைல தோப்பில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×