என் மலர்
செய்திகள்

காந்தி படத்தை சுட்டு அவமரியாதை- இந்து அமைப்புகளை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
காந்தி படத்தை சுட்டு அவமரியாதை செய்த இந்து அமைப்புகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #Congress
சென்னை:
உத்தரபிரதேச மாநிலத்தில் காந்தியின் உருவப்படத்தை சுட்டும், அவரை கொலை செய்த கோட்சே படத்துக்கு மாலை அணிவித்தும் இந்து அமைப்புகள் கொண்டாடியது.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி இன்று பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சித்குமார், டி.வி.துரைராஜ், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்புகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. #congress
Next Story






