என் மலர்

  செய்திகள்

  ஆம்பூர் அருகே காளை விடும் விழா- மாடுகள் முட்டி 20 பேர் காயம்
  X

  ஆம்பூர் அருகே காளை விடும் விழா- மாடுகள் முட்டி 20 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்பூர் அருகே பொன்னியம்மன் கோவில் தீ மிதி விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. இதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

  ஆம்பூர்:

  ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தீ மிதி விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

  காளை விடும் விழாவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். இளைஞர்களின் ஆரவாரத்தால் காளைகள் மிரண்டு போய் குறுக்கு நெடுக்குமாக ஓடின.

  அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

  விழாவில் முகாமிட்டிருந்த டாக்டர்கள் குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  விழாவையொட்டி தாலுகா போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  Next Story
  ×