என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பூரில் ஆங்கிலோ இந்திய வாலிபர்  கொலை
    X

    பெரம்பூரில் ஆங்கிலோ இந்திய வாலிபர் கொலை

    பெரம்பூரில் ஆங்கிலோ இந்திய வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    பெரம்பூர் பாக்சன் தெருவைச் சேர்ந்தவர் பிரைன் கிளார்க் (45). ஆங்கிலோ இந்தியர்.

    இவருடைய தம்பி கேரி கிளார்க் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் அனுப்பிய பணத்தில் வாழ்ந்து வந்தார்.

    இன்று காலை பாக்சன் தெருவில் பிரைன் கிளார்க் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். யாரோ அவருடைய தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

    தகவல் அறிந்ததும், செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்தது யார்? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.

    கொலைக்கான காரணம் என்ன? அவருக்கு யாருடன் பழக்கம்? என்பது குறித்து பிரைன் கிளார்க் குடியிருந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இவருடைய தம்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னை திரும்புகிறார்.

    Next Story
    ×