என் மலர்
செய்திகள்

போடி அருகே மனைவி கண் முன் மெக்கானிக் பலி
போடி அருகே மனைவி கண் முன் மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள செல்லாயிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 28). மெக்கானிக்காக இருந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி.
கணவன் மனைவி 2 பேரும் சிலமலையில் உள்ள சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்க சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
சங்கராபுரம் கூட்டுறவு வங்கி எதிரே வந்த போது சரவணன் என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் செல்லையா தனது மனைவி கண் முன்னே துடிதுடித்து இறந்தார்.
படுகாயமடைந்த சரவணன் போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story