என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விழுப்புரத்தில் போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை
விழுப்புரம்:
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் தலைமை ஏட்டாக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி பத்மா. இவரும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வேல்முருகனுக்கும், பத்மாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் வேல்முருகன் மனவேதனை அடைந்தார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த வேல்முருகன் திடீரென்று விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4 மணிக்கு வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.