search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரத்தான் ஓட்டத்தில் மா.சுப்பிரமணியன் சாதனை
    X

    மாரத்தான் ஓட்டத்தில் மா.சுப்பிரமணியன் சாதனை

    5 ஆண்டுகளில் 100 போட்டிகளில் ஓடி மாரத்தான் ஓட்டத்தில் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்துள்ளார். #Marathon #MaSubramanian

    சென்னை:

    சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் இன்று பெசன்ட்நகரில் நடந்த 21.1 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடினார்.

    பெசன்ட்நகர் ஆல்காட் பள்ளியில் போட்டி தொடங்கியது. 21.1 கிலோ மீட்டர் தூரம் ஓடி அதே இடத்தில் போட்டியை நிறைவு செய்தனர். இந்த தூரத்தை மா.சுப்பிரமணியன் 2.31 மணியில் ஓடி முடித்தார்.

    மா.சுப்பிரமணியனுக்கு இது 100 வது போட்டி ஆகும். கடந்த 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருப்பவர். 2004-ல் நடந்த சாலை விபத்தில் கால்  உடைந்தது.

     


    இருப்பினும் தனது மன வலிமையால் 2014 பிப்ரவரி 9-ந்தேதி மாரத்தான் போட்டி ஓட தொடங்கினார். தொடர்ந்து இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாரத்தான் போட்டிகளில் ஓடி வருகிறார்.

    5 ஆண்டுகளில் 25 முறை 21.1கி.மீ. தூரம் பங்கேற்று ஓடியதற்காக, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்ற 21.1 கி.மீ. தூரம் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு 29-வது மாரத்தான் போட்டியை முடித்து ஆசியா புக் ஆப் ரெக்கார்டு 50-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்து, வேல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டியால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார்.

     


    மேலும் இண்டர் நே‌ஷனல் கோல்டன் டிஸ்க் விருதை வேல்டு ரெக்கார்டு யூனியன் வழங்கியது. வேல்டு கிங் டாப் ரெக்கார்டு 2018 எனும் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

    இம்மாரத்தான் சாதனைகளைப் பாராட்டி திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

    மாரத்தான் போட்டிகளில் சாதனை படைத்த மா.சுப்பிரமணியனுக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர். #Marathon #MaSubramanian

    Next Story
    ×