search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சங்கரன்கோவிலில் பிரபல கொள்ளையர் 3 பேர் கைது
    X

    சங்கரன்கோவிலில் பிரபல கொள்ளையர் 3 பேர் கைது

    சங்கரன்கோவில் பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பாறை பட்டி, பிள்ளைகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை நடந்தது. இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் சித்ரகலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் நாகை மாவட்டம் திருகுவளை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது25), அரவிந்தன் (எ) ரூபன்ராஜ் (23), பாலசிங்கம் (24) ஆகியோர் என்பதும், இவர்கள் பிரபல கொள்ளையர்கள் என்றும் தெரியவந்தது.

    3 பேரும் சங்கரன்கோவில் பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மாரியப்பன் பைக்கில் சென்று கொள்ளையடிப்பதும், அதற்கு மற்ற 2 பேரும் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×