என் மலர்

    செய்திகள்

    பெற்றோர் படிக்கும்படி கூறியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை
    X

    பெற்றோர் படிக்கும்படி கூறியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் பெற்றோர் படிக்கும் படி கூறியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் பாரதி தாசன் நகரை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகள் அகிலா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அகிலாவிடம் அவரது பெற்றோர் நன்றாக படிக்குமாறு அறிவுரை கூறினார்.

    இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மனவேதனை அடைந்த அகிலா வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×