என் மலர்

  செய்திகள்

  நத்தம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி
  X

  நத்தம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நத்தம் அருகே பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நத்தம்:

  திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (24). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவரது தம்பி கணபதி (21).

  இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் துவரங்குறிச்சிக்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். இதில் கணபதி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார்.

  நத்தம் அருகே உலுப்பகுடி பகுதியில் இவர் ஓட்டி வந்த வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது காரைக்குடியில் இருந்து நத்தம் வழியாக பழனிக்கு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ் இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கணபதி கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

  இறந்தவர் உடல் நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

   

  Next Story
  ×