என் மலர்

  செய்திகள்

  பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
  X

  பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
  கூடலூர்:

  வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இருந்தபோதும் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காகவும் வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்து வதற்காகவும் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

  இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. முதல்போக சாகுபடி முடிவடைந்து 2-ம் போக சாகுபடியில் ஈடுபட்டுள்ள பள்ளத்தாக்கு விவசாயிகள் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

  இதனையடுத்து இன்று காலை முதல் பெரியாறு அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று வரை 467 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 48 கன அடி. இருப்பு 2312 மி.கன அடி.

  வைகை அணையின் நீர்மட்டம் 55.03 அடி. வரத்து 87 கன அடி. திறப்பு 860 கன அடி. இருப்பு 2724 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.20 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 95.77 அடி.

  Next Story
  ×