என் மலர்
செய்திகள்

X
தாராபுரம் அருகே கார் மோதி சிறுமி பலி- 3 பேர் படுகாயம்
By
மாலை மலர்20 Jan 2019 7:01 PM IST (Updated: 20 Jan 2019 7:01 PM IST)

தாராபுரம் அருகே ரோட்டை கடக்க முயன்ற சிறுமி மீது கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாராபுரம்:
தாராபுரம் அருகே உள்ள கள்ளிவலசை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் ஜனவர்த்தினி (வயது 10). ஆனந்தகுமார் என்பவரது மனைவி ரேவதி (22), இவர்களது மகள் சாய் ஸ்ரீ (2), நடராஜ் என்பவரது மனைவி தங்கம்மாள் (50). ஆகியோர் இன்று மதியம் உடுமலை-தாராபுரம் ரோட்டை கடக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜனவர்த்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த ரேவதி,சாய்ஸ்ரீ, தங்கம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X