என் மலர்

  செய்திகள்

  தூத்துக்குடியில் கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு
  X

  தூத்துக்குடியில் கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் கோவிலில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது. போலீசார் கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி டுவிபுரம் 3-வது தெருவில் கல்வி விநாயகர் கோவில் உள்ளது. இந்த பகுதியில் தேவாலயம் மற்றும் புதியதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த கோவிலில் பூட்டை உடைத்து அடிக்கடி திருடு போகியுள்ளது. 

  இதையடுத்து திருடர்களை கண்டுபிடிக்க கோவில் வளாகப்பகுதியில் சி.சி.டி.வி.கேமிரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பூஜைகளை முடித்துவிட்டு நிர்வாகிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

  இது குறித்து மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கேமிரா காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
  Next Story
  ×