என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
    X

    நெல்லை அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

    நெல்லை அருகே ரெயில் முன் பாய்ந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை நெல்லை தாழையூத்து ரெயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் திடீரென்று ரெயில் முன் பாய்ந்தார். அவர் மீது ரெயில் என்ஜின் மோதியதில் உடல் நசுங்கியது.

    இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு நெல்லை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பலியான வாலிபர் பெயர் விபரம் தெரியவில்லை.

    30 வயது மதிக்கத்தக்க அவர், சிகப்பு சட்டையும், மஞ்சள் நிற டவுசரும் அணிந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்? என ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை எக்ஸ் பிரஸ் ரெயில் சுமார் ½ மணி நேரம் காலதாமதமாக நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×