என் மலர்

  செய்திகள்

  கருங்கல் அருகே விபத்து - கல்லூரி மாணவர் பலி
  X

  கருங்கல் அருகே விபத்து - கல்லூரி மாணவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருங்கல் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நாகர்கோவில்:

  கருங்கல் அருகே தெருவுக்கடை தாழையன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலுபிள்ளை. இவரது மகன் ஷாஜின் (வயது 20).

  இவர், அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். நேற்றிரவு ஷாஜின், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே நண்பர்களை பார்க்க சென்றார்.

  கருங்கல்-வெள்ளியா விளை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஜீப் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஷாஜின் தூக்கி வீசப்பட்டார்.

  படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும், கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

  விசாரணையில், ஷாஜின் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றை முந்தி சென்றபோது ஜீப் மீது மோதி பலியானது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  விபத்து குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாணவன் ஷாஜின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

  மாணவர் பலியானதையடுத்து அவர் படித்து வந்த கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

  Next Story
  ×