என் மலர்
செய்திகள்

அரும்பாக்கம் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
அரும்பாக்கம் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி சி பிளாக். சேரன் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது25). பைக் மெக்கானிக். மணிகண்டன் குடிபழக்கம் கொண்டவர். திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார் .
இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் இருந்த மணிகண்டன் தந்தை குமாரிடம் உடனடியாக திருமணம் செய்து வைக்கு மாறு கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






