என் மலர்

  செய்திகள்

  தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை
  X

  தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  தேன்கனிக்கோட்டை:

  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டியை அடுத்துள்ள மிளித்திக்கி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கவிதா (வயது20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் கவிதாவுக்கு குழந்தை இல்லை.

  நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கவிதா திடீரென மாயமானார். இதனால் உறவினர்கள் கவிதாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

  இது குறித்து கவிதாவின் தாய் அஞ்செட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×