search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டிற்கு வந்து மசாஜ் செய்த பெண் ஊழியர் ரூ.8 லட்சத்துடன் ஓட்டம்
    X

    வீட்டிற்கு வந்து மசாஜ் செய்த பெண் ஊழியர் ரூ.8 லட்சத்துடன் ஓட்டம்

    போரூர் அருகே மசாஜ் செய்தாக வீட்டிற்கு வந்து ரூ.8 லட்சத்துடன் தப்பி ஓடிய பெண் ஊழியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    போரூர்:

    வளசரவாக்கம் வீரப்பாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவராஜ் (70). டவுன் பஞ்சாயத்து என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் கிண்டி போரூர் டிரங்க் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் மசாஜ் செய்வதற்காக சென்ற போது அங்கு பணிபுரிந்த ராணி என்பவர் அறிமுகமானார். இதை தொடர்ந்து தேவராஜ் வீட்டிற்கே சென்று ராணி மசாஜ் செய்து வந்தார்.

    இந்த நிலையில் ராணி நேற்று காலை தேவராஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் வங்கியில் லோன் எடுப்பது குறித்து ஆலோசனை கேட்க வந்ததாக கூறி பேசிவிட்டு சென்றார்.

    அதன் பின் தேவராஜ் தனக்கு சொந்தமான நிலத்தை விற்ற பணமான ரூ.8 லட்சத்தை வங்கியில் போடுவதற்காக பணம் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பணப்பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணத்தை ராணி கொள்ளையடித்து தப்பி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தப்பி ஓடிய மசாஜ் சென்டர் ஊழியர் ராணியை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×