search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரண விசாரணை: ஓபிஎஸ்-விஜயபாஸ்கர் அடுத்த வாரம் ஆஜர்
    X

    ஜெயலலிதா மரண விசாரணை: ஓபிஎஸ்-விஜயபாஸ்கர் அடுத்த வாரம் ஆஜர்

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அடுத்த வாரம் ஓபிஎஸ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆஜராகும் வகையில் சம்மன் அனுப்பப்படும் என ஆணைய வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர். #JayaDeathprobe
    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா, சசிகலாவின் உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்னாள் அமைச்சர் பொன்னையன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள்.

    விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆஜராக ‘சம்மன்’ அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்று வருவதால் அது தொடர்பாக பிசியாக உள்ளார்.

    இதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு அவரால் செல்ல முடியவில்லை. சொந்த வேலை காரணமாக கமி‌ஷனில் ஆஜராக முடியவில்லை என்று தகவல் அனுப்பி உள்ளார்.

    இதேபோல துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நாளை (20-ந் தேதி) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவரும் நாளை ஆஜராக மாட்டார் என தெரிய வந்துள்ளது.


    விஜயபாஸ்கரிடம் விசாரணை முடிந்த பிறகுதான் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரிக்க விசாரணை கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

    எனவே விஜயபாஸ்கர்- ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் வேறொரு தேதியில் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    அனேகமாக அடுத்த வாரம் இருவரும் கமி‌ஷனில் ஆஜராகும் வகையில் சம்மன் அனுப்பப்படும் என ஆணைய வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விசாரணை ஆணையத்தில் இன்று எய்ம்ஸ் டாக்டர் தேவகவுரவ் ஆஜராகி உள்ளார்.  #JayaDeathprobe #OPanneerselvam #Vijayabaskar
    Next Story
    ×