என் மலர்
செய்திகள்

பாம்பு குறுக்கே புகுந்ததால் பைக்கில் உறவினருடன் சென்ற இளம்பெண் பலி
மதுரை அருகே ரோட்டில் பாம்பு குறுக்கே புகுந்ததால் பைக்கில் உறவினருடன் சென்ற இளம்பெண் பரிதாபமாக பலியானார்.
மதுரை:
சென்னை போரூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகள் கார்த்திகா (வயது21). இவர் 2 நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள சடைச்சிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது உறவினர் சச்சின்பிரான் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வாலாந்தூர்-பாப்பாப்பட்டி ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சச்சின்பிரான் திடீரென பிரேக் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே சரிந்தது.
இதில் கீழே விழுந்த கார்த்திகா நடுரோட்டில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திகா பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக கார்த்திகாவின் தந்தை பெரியகருப்பன் வாலாந்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews

Next Story