என் மலர்

  செய்திகள்

  சேத்தியாத்தோப்பு அருகே இரும்பு பைப்பால் அடித்து பெண் கொலை- கணவர் கைது
  X

  சேத்தியாத்தோப்பு அருகே இரும்பு பைப்பால் அடித்து பெண் கொலை- கணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேத்தியாத்தோப்பு அருகே இரும்பு பைப்பால் அடித்து மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

  ஸ்ரீமுஷ்ணம்:

  அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). இவரது மனைவி சரளா(30) இவர்களுக்கு திருமாணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு பிறகு ஆறுமுகம் தனது மனைவியுடன் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த பாளையங்கோட்டை வடக்குபாளையத்தில் வசித்து வந்தார்.

  இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரளாவிற்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அதன்பிறகு அவர் கர்ப்பம் ஆகவில்லை.

  இதனால் ஆறுமுகம் சரளாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவிக் கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தரையில் கிடந்த இரும்பு பைப்பால் சரளாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த சரளாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சரளா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து சோழத்தரம் போலீசில் சரளாவின் தாய் சாரதாம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சோழத்தரம் போலீசார் ஆறுமுகம் மீது கொலை வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  Next Story
  ×