search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயற்கைக்கோள் வெற்றிகரமாக பறந்தது- இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு
    X

    செயற்கைக்கோள் வெற்றிகரமாக பறந்தது- இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு

    பிஎஸ்எல்வி சி43 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். #GKVasan #ISRO #PSLVC43
    சென்னை:

    இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோள்கள், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், மலேசியா, கொலம்பியா, பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளையும் சேர்த்து மொத்தம் 31 செயற்கைக்கோள்களை இந்திய விஞ்ஞானிகள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பாடுபட்டதற்கு த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.



    இந்த ஆண்டில் இஸ்ரோ செலுத்திய 6-வது செயற்கைக்கோள் இது. இந்தியாவின் 380 கிலோ எடை கொண்ட ஹைசிஸ் செயற்கைக்கோளானது விவசாயம், வனவளம், புவிபரப்பு, கடலோரப் பகுதிகள், உள்நாட்டு நீர் ஆதாரங்கள் ஆகியவற்றின் தன்மை குறித்த தகவல்களை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து பூமிக்கு அனுப்பும். இந்திய விஞ்ஞானிகள் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதிலும், வெற்றிகரமாக நிலை நிறுத்துவதிலும் தங்களின் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GKVasan #ISRO #PSLVC43
    Next Story
    ×