என் மலர்

  செய்திகள்

  மணல் கடத்தல் லாரி மோதி தொழிலாளி பலி
  X

  மணல் கடத்தல் லாரி மோதி தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
  கரூர்

  கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஆத்தூர் பிரிவு சாலையில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை பாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். ஈரோடு சாலையில் கரூர் அடுத்த காயத்திரி நகர் அருகே சென்ற போது பின்னால் வந்த மணல் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

  இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி லாரி டிரைவரை கைது செய்தனர். 

  விசாரணையில் லாரியில் இருந்தது கடத்தல் மணல் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
  Next Story
  ×