என் மலர்
செய்திகள்

X
கல்பாக்கத்தில் மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை
By
மாலை மலர்25 Nov 2018 4:58 PM IST (Updated: 25 Nov 2018 4:58 PM IST)

கல்பாக்கத்தில் மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்தராமையா (வயது 60) ஆந்திராவை சேர்ந்தவர். இவரது மகன் ஆனந்தராஜ். கல்பாக்கம் அணுசக்தி துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த வாரம் ஏற்பட்ட தகராறின் போது ஆனந்த ராஜ், தந்தை சித்தராமையாவை கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சித்தராமையா கடந்த 13-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இளையனார் குப்பம், கடற்கரை ஓரம் உள்ள முட்புதரில் சித்தராமையா பிணமாக கிடந்தார். மகனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
X