என் மலர்
செய்திகள்

கஜா புயல் சேதம் - நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார்
கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் 15 லட்சம் ருபாய் வழங்கியுள்ளார். GajaCyclone #GajaCycloneRelief #AjithKumar
சென்னை:
தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று மாலை பார்வையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் இன்று வழங்கியுள்ளார். #GajaCyclone #GajaCycloneRelief#AjithKumar
Next Story






