search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் - டிடிவி தினகரன்
    X

    இரட்டை இலை வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் - டிடிவி தினகரன்

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TwoLeavesSymbol #TTVDhinakaran
    சென்னை:

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர். டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை, அங்கிருந்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 



    இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் உள்ளது எனக்கூறி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தினகரனை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டிடிவி தினகரன் டுவிட்டரில் கூறுகையில், சிலரது சதியின் காரணமாக இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்கு தான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என பதிவிட்டுள்ளார். #TwoLeavesSymbol #TTVDhinakaran
    Next Story
    ×