என் மலர்
செய்திகள்

கஜா புயல் எதிரொலி - 94 நிவாரண முகாம்களில் 14,455 பேர் தங்கவைப்பு
கஜா புயல் தாக்கத்தின் காரணமாக நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 94 நிவாரண முகாம்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #GajaCyclone
நாகை:
கஜா புயல் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கஜா புயல் தாக்கத்தின் காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 94 நிவாரண முகாம்களில், 14,455 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வேதாரண்யத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க உத்தரவிட்டார். முகாம்களில் இருப்பவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாகப்பட்டினத்தில் மட்டும், 10,692 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் குடிசை பகுதியில் வசித்த மக்கள் நிவாரண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். #GajaCyclone
Next Story