search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே இடத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்- டிசம்பர் 16-ந்தேதி திறப்பு விழா
    X

    ஒரே இடத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்- டிசம்பர் 16-ந்தேதி திறப்பு விழா

    அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் பேரறிஞர் அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அமைய உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா முழு உருவ சிலை 16.9.87ல் நிறுவப்பட்டது. தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.

    கருணாநிதி மறைந்து விட்ட நிலையில் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீஞ்சூர் அருகே தயார் செய்யப்பட்டு வருகிறது.

    சிலை உருவாக்கப்படும் பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முகவடிவமைப்பில் உள்ள குறைகளை எடுத்து கூறி சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    அதன் அடிப்படையில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

    கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படுவதால் அதன் அருகே அண்ணா சிலை பழையதாக காட்சி தரும் என்பதால் அண்ணாவுக்கும் புதிதாக வெண்கல சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை நேற்றிரவு அகற்றப்பட்டு பத்திரமாக அறையில் வைக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை இருந்த பீடமும் இடிக்கப்பட்டுள்ளது.



    அங்கு விரைவில் புதிதாக பீடம் கட்டப்பட்டு அதில் அண்ணா, கருணாநிதிக்கு புதிய சிலை வைக்கப்படுகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

    இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கலைஞரின் திரு உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் 16-ந்தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்க இருக்கிறார்கள்.

    புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையும்-தலைவர் கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16-ந்தேதி தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
    Next Story
    ×