என் மலர்
செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் புகுந்து 3 மடிக்கணினிகள் திருட்டு
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் புகுந்து 3 மடிக்கணினிகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர்:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சங்கோட்டகம் என்ற இடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியை தீபாவளியையொட்டி பூட்டி சென்று விட்டனர். விடுமுறை முடிந்ததும் நேற்று முன்தினம் பள்ளி தலைமை ஆசிரியர் கோதண்டராமன் பள்ளியை திறக்க வந்தார். அப்போது பள்ளியின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மர்ம நபர்கள் பள்ளிக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 3 லேப்டாப்புகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுபற்றி கோதண்ட ராமன் திருத்துறைப்பூண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வல்லவ ராணி வழக்குப்பதிவு செய்து பள்ளிக்குள் புகுந்து லேப் டாப்புகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story