என் மலர்
செய்திகள்

ராஜபாளையத்தில் விவசாயி வீட்டில் 16 பவுன் கொள்ளை
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியைச் சேர்ந்தவர் சமுத்திரம் (வயது60), விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ராஜபாளையம் சென்றார்.
நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் கொள்ளைபோய் இருப்பதாக சமுத்திரம் தெரிவித்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ காம்பவுண்டு சுவரை தாண்டிக்குதித்து உள்ளே வந்து நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.