search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது- கவர்னர் உரை நிகழ்த்துவார்
    X

    ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது- கவர்னர் உரை நிகழ்த்துவார்

    ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை தொடங்க உள்ளது. கவர்னர் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறுகிறது. #TamilNaduAssembly

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடுவது வழக்கம். அதபோல் இப்போது ஜனவரி மாதம் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்க உள்ளது.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். மொத்தம் 5 நாட்கள் கூட்டம் நடைபெறும். இதில் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணா நிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். இதேபோல் திருப்பரங்குன்றம் எம்.எல். ஏ.வாக இருந்த ஏ.கே.போஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும்.

    ராமசாமி படையாட்சியார் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பேரவை கூட்டத் தொடரின் போது ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்படும். #TamilNaduAssembly 

    Next Story
    ×