என் மலர்
செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் ரூ.9.80 லட்சம் சிக்கியது
திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #trichyairport
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது
அதே போன்று நேற்று இரவு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் செல்லும் பயணிகளின் உடைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் இருந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த பயணி விஜயகுமார் (வயது 30 ) என்பவரது உடைமைகளை சோதனை செய்த போது அவர் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய பணம் ரூ.9.80 லட்சம் மதிப்புள்ள 13.40 அமெரிக்க டாலர்களை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #trichyairport
Next Story






