search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்த விவகாரம் - தமிழகத்தில் 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
    X

    சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்த விவகாரம் - தமிழகத்தில் 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

    சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Diwali #Crackers #TNGovt #SC
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.  

    இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இதன்படி, தீபாவளி திருநாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி தமிழக அரசு அறிவித்தது.

    இந்நிலையில், தீபாவளி தினத்தன்று தமிழகம் முழுவதும் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் காலை முதலே பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ஆனாலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை - 97, கடலூர் - 13, விழுப்புரம் - 255, நாமக்கல் - 7, ஈரோடு - 7, தஞ்சை - 10, சேலம் - 50, கொடைக்கானல் - 2, வேலூர் - 2, நெல்லை - 31, விருதுநகர் - 80, கோவை - 85, திருப்பூர் - 57, அரியலூர் - 14 என இதுவரை 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Diwali #Crackers #TNGovt #SC
    Next Story
    ×