என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

மு.க.ஸ்டாலின்-தினகரன் பல தடவை சந்தித்து பேசி உள்ளனர் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதி இடைத்தேர்தல்கள் விரைவில் வர இருக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பாக 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் உறுதியாக 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பதை தெரிவிக்கிறேன்.
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் பேசியதாக பத்திரிகையில் வந்த செய்தி தவறு.

எந்த சூழ்நிலையிலும் 4 தொகுதி, 6 தொகுதி, 8 தொகுதி என அவர் பேசவில்லை. முழுமையாக அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் பேசினார். வெற்றிக்காக பூர்வாங்க பணிகளை கழகத்தின் பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்திட வேண்டும். உறுதியாக அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் பேசினார்.
கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது எங்களது பெருந்தன்மை. அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மனநிலையாகும்.
அம்மா வகுத்து தந்த கொள்கைபடி எந்த சூழ்நிலையில் எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து நின்றுதான் வெற்றி பெறும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துள்ளார்.
எங்களுடன் ஒத்த கருத்தோடு, கொள்கைகளோடு இணைந்து வருகிற கட்சிகள் வந்தால் நாங்கள் அதை இணைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், மு.க.ஸ்டாலினும்- தினகரனும் பல முறை ரகசியமாக சந்தித்து பேசுவதாக எங்களுக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #MKStalin #DMK #TTVDhinakaran #OPanneerselvam