search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதியமான்கோட்டை பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள்
    X

    அதியமான்கோட்டை பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள்

    அதியமான்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை கிராமத்தில் இன்று டெங்கு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி அடுத்துள்ள அதியமான்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை கிராமத்தில் இன்று டெங்கு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மொழிதேவன் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், டெங்கு கொசு புழுக்கள் உருவாகாமல் இருக்க தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். இந்த பணியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் இணைந்து, குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரியும், தேவையற்ற நிலையில் இருந்த பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்றி, தேங்காய் மட்டை ஓடுகள் மற்றும் பழைய டயர்கள், முட்புதர்களை அப்புறப்படுத்தி தூய்மை பணி செய்தனர். 

    மேலும், அரசு பள்ளி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு கொசுப் புகை அடிக்கப்பட்டு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

    இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்மணி, ஊராட்சி செயலர் பிரகாஷ், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×