என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சென்னையில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது
By
மாலை மலர்30 Oct 2018 1:54 AM GMT (Updated: 30 Oct 2018 1:54 AM GMT)

வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னையில் காலை முதல் மழை பெய்து வருகிறது. #ChennaiRain #HeavyRain #NorthEastMonsoon
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததையடுத்து, வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால், பருவமழை தொடங்குவதற்கான சூழல் தென்படவில்லை. அதேசமயம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain #HeavyRain #NorthEastMonsoon
Next Story
×